தமிழகத்தில் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஒரே நியாயவிலைக் கடைகளில் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருக்கிறது என்றும், எங்கெல்லாம் பிரிக்க வேண்டிய தேவை இருக்கிறதோ, அங்கெல்லாம் கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். ஒரு முழு நேர நியாய விலைக்கடை அமைக்க ரூ.3 லட்சம் செலவாகும் சூழலில், சொந்த கட்டடங்களும் கட்டப்பட வேண்டிய தேவை இருப்பதாக கூறிய அமைச்சர், உணவுத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையுடன் ஆலோசித்து, விரைவாக பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்தார்.