காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் தலவிருட்சம் என போற்றப்படும் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஒன்று கருவறைக்கு பின்புற பிரகாரத்தில் உள்ளது. இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகள் ரிக், யஜூர், சாம, அதர்வண என்னும் 4 வேதங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த மாமரம் தெய்வீக மரமாக பார்க்கப்படுகிறது. இந்த மரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நான்கு வகை சுவைகளை கொண்ட கனிகளை தருகின்றது. இந்த மரத்தின் அடியில் சிவன் பார்வதியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். தற்போது, இந்த மாமரத்தில் 4 சுவையுடன் கூடிய மாங்கனிகள் காய்க்கத் தொடங்கி உள்ளது. இந்த அதிசய மாமரத்தினை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.