20 ஓவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 15ஆவது சீசன் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக போட்டி மும்பையில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில், கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தநிலையில் இந்த போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணாவுக்கு போட்டி சம்பளத்தில் 10சதவீதம் அபராதமும், மும்பை அணியின் பும்ராவுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.