மனிதனின் வாழ்க்கையில் விடை தெரியாத கேள்விகள் நிறைய இருக்கின்றன. அதில் ஒன்று, ஏலியன்கள். அவர்கள் உண்மையானவர்களா? அப்படியென்றால், அவர்கள் எங்கு இருக்கிறார்கள், எப்படியிருப்பார்கள் எனப் பல கேள்விகள் அது சம்பந்தமாக எழுப்பப்பட்டு வருகின்றன. என்றாலும், அதுதொடர்பான திரைப்படங்களும், சீரியல்களும் எடுக்கப்பட்டு உலகைக் கலக்கிவருகின்றன. இந்த நிலையில், தன் உடல் ஏலியன் தோற்றத்தில் தெரிய வேண்டும் என்பதற்காக தலையில் கொம்புகளைப் பதித்துள்ளார். தவிர மூக்கின் ஒரு பகுதியையும், விரல்களில் ஒன்றையும் நீக்கியுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த அவரது பெயர் மிச்செல் ஃபாரோ டோ பிராடோ. இவர்தான் வித்தியாசமான தோற்றத்தைத் தருவதற்காக தனது உடலில் 60க்கும் மேலான சிகிச்சை முறைகளை மேற்கொண்டுள்ளார். 85 சதவீதம் அளவுக்கு டாட்டூ ஓவியங்களை வரைந்துள்ளார். தற்போது அவர், இரண்டு காதுகளையும் நீக்கி அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறார். இப்படி ஒரு வினோத உருவத்துடன் காணப்படும் அவர், ஏலியனாக அழைக்கப்படுகிறாரோ இல்லையோ அந்நாட்டு மக்களால் மனித சாத்தான் என அழைக்கப்படுகிறார்.