பிரான்சில்அதிபர்தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளார் பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ.இடதுசாரி கட்சியைச் சேர்ந்த இவர்,தீவிர வலதுசாரி சிந்தனையுடைய மரைன் லு பென்னை எதிர்த்து போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளன.பசுமைபுரட்சி மற்றும் சமூகபிரச்னைகளை முன்னிறுத்தி தனது தேர்தல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.62வயதாகும் ஹிடால்கோ முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனையாளர். 2001 முதல் 2014 வரை பாரிஸ்நகரத்தின் முதல் பெண் துணைமேயராக பணியாற்றியவர்.தற்போது பாரிஸ் நகரத்தின் மேயராக பணியாற்றுகிறார்.இந்த மாத இறுதியில் அதிபர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ள ஹிடால்கோ கல்வி,சுகாதாரம்,வீட்டுவசதி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறார்.2018 முதல் 2019 வரை அங்குள்ள ஒரு அமைப்பு பாரிஸ் நகரத்தில் கலவரங்களை ஏற்படுத்தி நெருக்கடி நிலையை ஏற்படுத்தியபோது அந்த கலவரத்தை திறமையாக கையாண்டு அங்குள்ள மக்களை பாதுகாத்தார்.எளியக்குடும்பத்தில் பிறந்த ஹிடால்கோ தந்தை எலக்டிரிஷியனாகவும் தாய் தையல் தொழிலாளியாகவும் பணியாற்றியுள்ளனர்.மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் அனைத்து தரப்பு மக்களின் செல்வாக்கால் ஹிடால்கோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது உள்ள அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற சூழல் அங்கு இருப்பதால்,வலதுசாரி போட்டியாளரான மரைன் லு பென் மற்றும் ஹிடால்கோ ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பாக்கப்படுகிறது.இது தொடர்பாக பேசிய,”ஹிடால்கோ எனக்கு கிடைத்த சம வாய்ப்புகள் பிரான்சில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும்.”என்று பேசியுள்ளார்.மேலும் பேசியவர்”ஸ்பெயின் குடியேறியாக இருந்தபோது தாம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும்,இங்குள்ள பிரென்ஸ் பள்ளி ஒன்று சமவாய்ப்பை வழங்கியதை அடுத்தே தாம் உயர்ந்ததாகவும் கூறியுள்ளார்.