சமூக வலைத்தளமான டுவிட்டா் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார், டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க். இவர், உலகின் நம்பர் 1 பணக்காரராகவும் இருக்கிறார். டுவிட்டா் நிறுவனத்தில் அவர், சுமார் 9 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இந்த நிலையில், ‘டுவிட்டர் இயக்குநா்கள் குழுவில் இடம்பெற மாட்டேன்’ என்று கூறி பகீரைக் கிளிப்பிய மஸ்க், அடுத்த சில நாள்களில் ‘சுமார் 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்க தயார்’ எனச் சொல்லியிருந்தார். அதாவது ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு 54.20 டாலர் வீதம் வாங்க முன்வந்திருந்தார் மஸ்க். இதை டுவிட்டர் தளம் நிராகரித்தது. குறிப்பாக, டுவிட்டர் நிறுவன தளத்தில் கணிசமான அளவு முதலீட்டை வைத்திருக்கும் சவூதி அரேபிய இளவரசரான சர் அல்வலீத் இதனை முழுவதுமாக நிராகரித்துள்ளார். இந்த நிலையில் டுவிட்டர் தளத்தைக் கைப்பற்ற தன்னிடம் மாற்றுத் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளார் எலான் மஸ்க். டுவிட்டர் தளத்தை வாங்குவது தொடர்பான இவருடைய பேச்சை சமீபத்தீல் இலங்கையுடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்திருந்தனர் நெட்டிசன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.