உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மூதாட்டி தன்னை எதிர்த்து நின்றவர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் மூதாட்டி பெருமாத்தாள். இவரை எதிர்த்து நின்றவர்கள் டெபாசிட் இழந்த நிலையில் மூதாட்டி பெருமாத்தாள் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார் முதாட்டி பெருமாத்தாள்.