day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

எங்கும் பெண்மை எதிலும் பெண்மை – தமிழ்முல்லை

எங்கும் பெண்மை எதிலும் பெண்மை – தமிழ்முல்லை


இன்றைய உலகில் பெண்கள் பல இடத்திலும் தன் கால் தடத்தைப் பதிக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக விளையாட்டுத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. தற்போது விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் பெண்கள் பெரும்பாலும் கிராமப் புறங்களிலிருந்து வந்தவர்களே. அந்த வரிசையில்

கடலூரைச் சொந்த ஊராகக் கொண்டவர் மாணவி  தமிழ்முல்லை. சிறு வயதில் விளையாட்டாக நீச்சல் குளத்திற்குச் சென்றவர், பயிற்சி ஆசிரியர்களால் ஊக்கவிக்கப்பட்டு மாநில அளவில் பல பதக்கங்களை வென்று தேசிய அளவில் சாதனை களைப் புரிந்துள்ளார்

பிரிட்டானியா அரசுப்பள்ளி யில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, தமிழ் மொழி மீது கொண்ட ஆர்வத்தினால் செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்து வருகிறார்

நீச்சல் போட்டிகளில் தமிழ்நாடு மாநில அளவில் 68 தங்கப் பதக்கங்களும், 78 வெள்ளிப் பதக்கங்களும், மற்றும் 94 வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் கோப்பை போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் வெற்றிபெற்று 2,15,000 ரூபாய் பரிசுத்தொகையையும் ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் 2012-2018 வருடங்களில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றுள்ளார். மிக அண்மையில் பல்கலைக்கழக நீச்சல் போட்டியில் மாநில அளவில் தேர்வு செய்யபட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பாக தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்றுள்ளார். மேலும் இவர் பரத நாட்டியம் (சலங்கை பூஜை), கர்நாடக இசை, கராத்தே (ரெட் & பிளாக் பெல்ட்) ஆகியவற்றிலும் தேர்ந்தவர்.

தனது வெற்றிக்குப் பின்னால் தாய் கண்ணம்மாள், தந்தை தமிழ் இயலான், சகோதரன் பண்பரசன் மற்றும் அனைத்து நீச்சல் பயிற்சியாளர்களின் ஆதரவும், துணையும், உதவியும் மிகவும் இன்றியமையாதது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

பல துறைகளில் சாதிக்கும் எண்ணம் எப்படி உங்களுக்கு எழுந்தது என்று கேட்டபோது

எனது வீட்டில் சிறுவயது முதல் தொலைக்காட்சி பெட்டி இல்லை. எனவே எனது கவனம் பலதுறைகளில் சிந்திக்க வைத்தது என்றார். இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், தரையில் மட்டுமே அமர்தல், உறங்குதல், யோகா, மூச்சுப் பயிற்சி ஆகிய பல இயற்கை வழிமுறைகள் என்னை இன்னும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது என்றார். அன்பும் நன்றியுணர்வுமே எனது வெற்றிக்கு முக்கிய காரணம். எனவே அதை ஒருநாளும் கைவிடமாட்டேன் என்கிறார் மகிழ்ச்சியோடு.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!