நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளின் அரசி உதகையைக்கான வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால் அங்கு கோடை சீசன் களைகட்டி உள்ளது. இதனையடுத்து உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. தாவரவியல் பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா, ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் பல்வேறு ரகங்களில் பூத்துள்ள மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். மேலும், பூங்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பச்சை புல்வெளியில் புகைப்படம் எடுத்தும், ஆடி பாடி மகிழ்ந்தும் விடுமுறையை கழித்து வருகின்றனர்.