ஏப்ரல் 7ஆம் தேதியான இன்று ஆண்டுதோறும் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அனைவருக்கும் உலக சுகாதார தின வாழ்த்து கூறி அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார். சுகாதார துறையிலுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளான இன்று இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்க இந்திய அரசு அயராது உழைத்து வருகிறது என்று கூறியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் நமது தேசம் என்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது. கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித்துறையில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.