தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாமஸ் மற்றும் உலக கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி நடைப்பெற்று வருகிறது. 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இந்தநிலையில் டி பிரிவில் இடம்பெற்று இருக்கும் இந்திய பேட்மிண்டன் அணி நேற்று தனது 2ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதியது. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அமெரிக்க அணியை தோற்கடித்து கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது. முதல் லீக் ஆட்டத்தில் கனடா அணியை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றிப்பெற்றது.