“உலகம் மாறவேண்டுமென்றால் முதலில் நான் மாறவேண்டும்” என்று திருமண மன முறிவுக்கு பிறகு சமந்தா சமூக வலைத்தளங்களில் உணர்வுப் பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி சமந்தாவுக்கும்,தெலுங்கு நடிகர் நாகசைதன்யா விற்கும் திருமணம் நடைபெற்றது. இந்து – கிறிஸ்தவ முறைப்படி இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இருவரும் குடும்ப வாழ்கை தொடங்கிய நிலையிலும் தொடர்ந்து சமந்தா படங்களில் நடித்து வந்தார். அந்த வரிசையில் சமீபத்தில் அவரது நடிப்பில் ‘தி பேமலி மேன்’ என்ற வெப் தொடர் வெளியானது. அந்த தொடரில் அதிக கவர்ச்சியுடன் நடித்ததால் சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் டிவிட்டரில் தனது பெயிரில் ‘எஸ்’ என சமந்தா மாற்றியது இருவரும் விவகாரத்து செய்யப்போகிறார்கள் என்ற சலசலப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அவர்களுடைய பிரச்னை குறித்து இருவரும் வாய் திறக்காத நிலையில் வெறும் வதந்தியாக முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கையில் தங்களது திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்தனர். இவர்களுடைய இந்த பிரிவு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சமந்தா மிகவும் உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் “உலகம் மாற வேண்டும் என்றால் முதலில் நான் மாற வேண்டும். என் படுக்கையை நான் உருவாக்க வேண்டும். அதிக நேரம் தூங்ககூடாது.அலமாரியை துடைப்பது உள்ளிட்ட என் வேலைகளை நானே செய்ய வேண்டும். என் கனவை ஜெயிக்க அதை நோக்கி போகனும் “என்று பதிவிட்டுள்ளார்