சிவகங்கை மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த சரவணன்குமார் (30) ஆவடி பூம்பொழில் நகரில் உள்ள நேரு தெருவில் தங்கி தமிழக காவல்துறையில் வேலை பார்த்து வருகிறார். அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே மத்திய அரசின் தொலை தொடர்பு சிறப்பு நிறுவனத்தின் தொலைத்தொடர்பு இணையங்களை கண்காணிக்கும் பணியில் காவலர்கள் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில், அங்கு சரவணகுமார் ஆயுதப்படை காவலராக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து, சரவணன்குமார் பணியில் இருக்கும் பொழுதே தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மகேஷ், உதவி ஆணையர் கனகராஜ், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரவணன்குமாருக்கு 6 மாதத்திற்கு முன் ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்ததாக கூறப்பப்படும் நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் அதிகமாக பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.