2019 -ஆம் ஆண்டு செப்டிக் டேங்கை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் கோவிந்த் சங்கரம்சொரோடியா, சந்தோஷ் கல்சேகர் மற்றும் விஸ்வஜித் தேப்நாத் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இந்த மூன்று பேரையும் நம்பியிருந்த குடும்பத்தினர் நடுத் தெருவில் நின்ற நிலையில். உயிரிழந்தவர்களின் மூன்று பேரின் மனைவிகள் விமலா சோரோடியா, நிதா கல்சேகர் மற்றும் பானி தேப்நாத் ஆகியோர் நிவாரணம் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ” ‘மனித கழிவுகளை கைகளால் சுத்தம் செய்யும் வேலையில் பணி அமர்த்த தடை மற்றும் துப்புரவு பணியாளர் மறுவாழ்வு சட்டம்- 2013 -ன்’ கீழ் இந்த மூன்று பெண்களுக்கும் மஹராஷ்ரா அரசாங்கம் உரிய நிவாரண நிதியை நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது. அதோடு அவர்களுக்கு மறுவாழ்வுக்கான வேலைகளையும் அந்த பெண்களுக்கு உருவாக்கி தர வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த பெண்களின் செயல்பாடு நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் பாராட்டி நீதிமன்றம் பாராட்டியுள்ளது..