சென்னை, புரசைவாக்கம் பகுதியில் உள்ள வைக்கோகாரன் தெருவில் வசித்து வந்தவர் அசோக் பாபு (53). இவரின் இரண்டு மகன்களும் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் இவரின் மகள்களில் ஒருவரான ஆர்த்தி கடந்த இரு தினங்களாக அசோக் பாவுக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்தும் பதில் இல்லை. இதனால், சந்தோகமடைந்த மகள் காவல்துறையினருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு உள்பக்கமாக தாழிட்டப்பட்டு இருந்தது. உள்ளோ சென்று பார்த்தபோது, அசோக் பாபு நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார். அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட அவரின் மனைவி பத்மினி(48) அசோக் பாபுவையே பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து அசோக் பாவுவின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேப்பேரி காவலர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அசோக் பாபுவின் மனைவி பத்மினியை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து வருகின்றனர். உயிரிழந்த கணவனின் சடலத்துடன் மனநலம் பாதிக்கப்பட்டு மனைவி இரு தினங்களாக வாழ்ந்த பரிதாப சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.