தங்களுடைய வார்டுகளில் அடிப்படை பணிகள் வேகமாக நடைபெறுவதை புதிய கவுன்சிலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய அறிக்கையில், தெருக்களில் குப்பைகளைச் சேகரிக்க வரும் சுகாதாரப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டை கவுன்சிலர்கள் ஆய்வுசெய்ய வேண்டும். குப்பைத் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வதைக் கண்காணிக்க வேண்டும். கொசு மருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருந்து வார்டு பணிகளை செய்ய வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.