2021-22ம் நிதி ஆண்டில் நேரடி மற்றும் மறைமுக வரிகள் சேர்த்து மொத்தமாக ரூ.27.07லட்சம் கோடி வரி வசூலாகியுள்ளது. இது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட ரூ.5 லட்சம் கோடி அளவில் அதிகம். 2020-21ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், நேரடி வரிகள் 49 சதவீதம் அளவிலும், மறைமுக வரிகள் 30 சதவீதம் அளவிலும் அதிகரித்துள்ளன.