உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 61ஆவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. முன்னதாக, உக்ரைனில் ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடங்கியது. அன்று முதல் அமெரிக்கா, ஐரோப்பிய நோட்டோ அமைப்பு நாடுகள் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் உக்ரைன் போருக்கு தேவையான ராணுவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இரண்டாவது கட்டமாக மிக பெரிய அளவிலான 800 பில்லியம் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணும் உள்ளிட உதவிகளை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியது. இதனைத்தொடர்ந்து உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ராணுவத்துறை அமைச்சரிடம், மேலும் ராணுவ உதவிகளை செய்ய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைக்கத்திருந்தார். இதனையேற்று அமெரிக்காவும் உக்ரைனுக்கு தேவையான உதவிகளை அளிப்பதாக நேற்ற உக்ரைன் பயணத்தில் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை அனுப்ப வேண்டாம் என அமெரிக்காவிடம் ரஷ்யா எச்சரித்துள்ளது. இதனை அமெக்காவுக்கான ரஷ்யா தூதர், ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்றுவரும் போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்க உதவி வரும் நிலையில் ரஷ்யாவின் இந்த எச்சரிக்கை குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.