2022ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2க்கு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதியான நேற்று வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் இணையதளம் தாமதமாக செயல்படுவதாக தேர்வர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, TET – காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைவித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டுவீட் செய்திருந்தார். இந்தநிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றில் பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான அவசியம் இல்லை என்று திட்டவட்டமாக ஈபிஎஸின் கோரிக்கையை மறுத்துள்ளார். மேலும் கடந்த 5 நாட்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.