கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ளது திம்மநாய்க்கன்பாளையம் கிராமம். சுமார் 200 குடும்பங்கள் வசித்துவரும் இந்தகிராமத்தில் கடந்தவாரம் அடுத்தடுத்து 4 நாய்கள் மர்மமான முறையில் இறந்துள்ளது. இந்தசம்பவம் ஏற்படுத்திய அச்சம் கிராம மக்களிடையே தணிவதற்குள் அடுத்த பிரச்சைனையாக ஈக்களின் படையெடுப்பு அதிகரித்து உள்ளது. அந்தகிராம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் லட்ணக்கணக்காண ஈக்கள் உலா வருவதால், ஒருபிடி சோறு மட்டுமல்ல நிம்மதியாக ஒரு டீ கூட குடிக்க முடிவதில்லை என்று அந்த கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், டீ குடிப்பதற்குள் 10 ஈயாவது டம்ளரில் விழுந்து விடுவதாக கூறுகின்றனர். இதனையடுத்து, ஈ பிரச்சனையால் கிராமமக்கள் பலருக்கு தொண்டை நோய் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்ககு மனு அளித்துள்ளனர். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் தெரிவிதித்துள்ளனர். மேலும், விரைவில் ஈ பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிச்ச கிராம மக்கள் ஈக்கள் தொல்லையால் ஊரையே காலி செய்யும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளதாக கவலைத் தெரிவித்தனர்.