ரமலான் பண்டிகை இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படுகிறது. ஈகை திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இன்று காலை முதலே நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு பெருநாள் தொழுகை நடத்தினர். இதனையொட்டி, தொழுகை முடிந்ததும் இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். முன்னதாக, இன்று ரமலான் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.