இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகரின் பிரதான பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8பேர் காயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும் பாலஸ்தீனியர்களின் சமீபகால தாக்குதல்களின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த சில தினங்களாகவே பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.