இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய பயணி என்ற பாடல் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஐஸ்வர்யா ஹிந்தியில் காதல் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதற்காக முன் கட்ட தயாரிப்பு பணிகளில் தற்போது ஐஸ்வர்யா ஈடுபட்டுவருகிறார். இந்தப் படத்துக்கு ‘ஓ சாதி சால்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தையும் ஐஸ்வர்யா இயக்கவிருக்கிறார். இந்தநிலையில் இளையராஜாவுடன் இருக்கும் படத்தை ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது பதிவில், ”எனது திங்கள் கிழமை மதியம் இசையுடன் கழிந்தது. என் அன்புள்ள இளையாராஜாவுடன் நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் ‘வொர்க் மோட் ஆன்’ என்று குறிப்பிட்டுள்ளதால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.