விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே பொதுமக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பொருளாதார நெருக்கடி காரணமாக வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதால், சுற்றுலாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஊழியர்களும் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தங்களின் தூதரகங்களைத் தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 30ஆம் தேதி முதல் 3 நாடுகளிலும் உள்ள தூதரகங்கள் செயல்படாது என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.