15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 73ஆவது ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்தப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்றிரவு நடக்கவுள்ளது. இந்த தகுதி சுற்று போட்டியில் வெற்றிபெறும் அணியே இறுதி சுற்றிக்கு இரண்டாவது அணியாக தேர்வு செய்யப்படும். ஏற்கனவே, ஹர்திக் பாண்ட் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக இந்தத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிப்பெறும் அணியுடன் இந்தத்தொடரின் கடைசி ஆட்டமான 74ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.