இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இன்றைய சட்டசபையில் பேசிய அமைச்சர் நாசர், ‘தரம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பால்வளத் துறையில் பத்தாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது. இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.