இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற இருக்கிறது. இந்த சந்திப்பில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் இணைந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மேலும், இருநாட்டு அமைச்சர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தையில் இணைய உள்ளார். இந்தபேச்சுவார்த்தையில், 2 நாட்டு அரசாங்கம், பொருளாதாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதல் மற்றும் மேலும் பல்வேறு காரணிகள் குறித்து பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.