கொரோனா வைரஸ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரிபுகளை உருவாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துவருகிறனர். இதனையடுத்து, ஒமைக்ரானிலிருந்து மரபணு மாற்றம் அடைந்த எக்ஸ்இ என்ற புதிய வகை கொரோனா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகின்றன. இந்த புதிய வகை திரிபு ஒமைக்ரானைவிட 10 மடங்கு அதிகமாக பரவும் தன்மை கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்திலும் எக்ஸ்இ வகை புதிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. எனவே கொரோனா உயர்நிலை ஆலோசனைக் குழுவுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா குறித்து ஆய்வு செய்யவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.