இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,451 பேருக்கு கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்றுவரை, கொரோனா பாதித்து 14,241 சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நேற்று ஒரேநாளில் 1,589 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனையடுத்து இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,24,16,068ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனாவுக்கு 5,22,116 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.