இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் 2,288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. இது கடந்த சில தினங்களுக்கு முன் இருந்த எண்ணிக்கையை விட கிட்டதட்ட 1000 குறைவு ஆகும். இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,31,07,689ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 3,044 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,63,949ஆக உள்ளது. தற்போது 19,637 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது நேற்றைய எண்ணிக்கையை விட 766 குறைவு ஆகும். தவிர, கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,103ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 189,81,52,695 பேர் கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.