இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,545 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையான 3,275விட அதிகமாகும். இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,94,938ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 3,549 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,51,248ஆக உள்ளது. தற்போது 19,688 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தவிர, கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,002 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 189,81,52,695 பேர் கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த வார தொடக்கத்தில் சுமார் 2500ஆக கொரோனா பதித்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 10 நாட்களில் 1000க்கும் மேல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.