இன்று சென்னை தியாகாராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ”பாரத பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் புதிய இந்தியா 2022” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட நடிகர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். விழாவில் பேசிய பாக்யராஜ், பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவது எனக்கு பாக்கியம் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து குறைக்கூறிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி ஓடிக்கொண்டே இருக்கிறார்? அவர் உடலை எப்படி வைத்துக்கொள்கிறார் என யோசிக்க வேண்டும். இப்படி ஒரு எனர்ஜியான பிரதமர் தான் இந்தியாவுக்கு தேவை என பாக்யராஜ் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது என்று கூறிய அவர் பிரதமரை குறைக்கூறுபவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.