நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை அலுவல் மொழிக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு மாற்றாக அனைத்து மக்களும் இந்தியை ஏற்க வேண்டும் எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தநிலையில், சென்னையில் உள்ள பா.ஜ.க., அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தி திணிப்பை எக்காரணம் கொண்டும் தமிழக பாஜக அனுமதிக்காது என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியை கட்டாயம் திணிக்க மாட்டோம், பாஜகவும் அதை செய்யாது என்று பேசினார். மேலும், புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்தி விருப்ப மொழியாகத்தான் உள்ளது. இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் என்று ஏ.ஆர்.ரகுமான் சொன்னது சரிதான். தமிழ் இணைப்பு மொழியாக இருப்பது பெருமைதான் என்று குறிப்பிட்டுள்ளார்.