சென்னை போயஸ் கார்டனில் சிவந்தி ஆதித்தனாரின் (அவரது இல்லத்தில்) 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு மரியாதை செலுத்திய பின் நிருபர்களைச் சந்தித்தார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது பேசிய அவர், சீமானின் கருத்துக்குக் கண்டனத்தைப் பதிவுசெய்தார். பின்னர், ‘முதல்வர் எப்போது பார்த்தாலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார். அவர், ஆளுநர்மீது பழியைப் போடுவதற்காகவே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார். மேலும், அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன இருக்கிறதோ, அதைத்தான் ஆளுநர் பின்பற்ற முடியும். அவருக்கு அழுத்தம் கொடுக்கலாம்; ஆனால் புறக்கணிக்கக்கூடாது’ என்றார்.