அரியானா அரசில் இரண்டு முறை அமைச்சராகவும் நான்கு முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் சிங். இவர், தற்போது தனது மகள் சித்ராவோடு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். சமீபத்தில் பஞ்சாபில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சியில் சேரும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.