ஆப்கானிஸ்தானில் எது நடக்கக்கூடாது என்று உலக நாடுகள் பயந்துக் கொண்டிருந்ததோ,அது அங்கு தற்போது நடந்தேறியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.இந்த நடவடிக்கையால்,அங்குள்ள பெண்கள் குழந்தைகளின் நிலை என்ன ஆகுமோ என்றிருந்த நிலையில்,தற்போது அவர்களை வதைக்கும் சூழல் அங்கு உருவாகியுள்ளது.எதிர்ப்பு,வன்முறை இல்லாத அமைதியான வாழ்கையை வாழ வேண்டு என்று போராடி வரும் பெண்களை தாலிபான் சித்ரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.இதற்கிடையில் பெண்கள் விளையாட தடைவிதித்து தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் உடல் மற்றும் அங்கங்கள் தெரியும் என்றும் இஸ்லாமிய நெறிகளுக்கு,இது எதிரானது என்றும் தலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அகமதுல்லா வசிக் கூறியுள்ளார்.மீடியா மற்றும் செல்போன்களின் தாக்கம் அதிகம் இருப்பதால் பெண்கள் விளையாடுவதற்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால் இந்த தடை உத்தரவை பிறப்பிப்பதாக கூறியுள்ளார்.ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டெஸ்ட்போட்டிக்கு ஆப்கன் ஆடவர் கிரிக்கெட் அணி மட்டும் செல்ல உள்ளதாக கூறியுள்ளார்
தாலிபான்களின் இந்த நடவடிக்கை விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்டு கோல்பெக் கண்டனம் தெரிவித்துள்ளார்.”தாலிபான்களின் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா விளையாட்டு அமைப்பு ஏற்றுக்கொள்ளாது.சர்வதேச அளவில் அனைத்து நாடுகளின் விளையாட்டு போட்டிகளும் முன்னேற வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது.இந்நிலையில் தாலிபான்கள் இப்படியான ஒரு நிலைப்பாடு எடுத்திருப்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று கூறியுள்ளார்.அதோடு இந்த பிரச்னையை எளிமையாக கடந்து போய்விட முடியாது என்றும் இதற்கு எதிராக கரிக்கெட் கவுன்சில் மற்றும் சர்வதேச விளையாட்டு அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான மகளிர் தடகள வீரர்கள்,கால்பந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தாலிபான்களின் இத்தகைய நடவடிக்கை அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது வரை மகளிர் அணியினர் விளையாட்டை தொடர்ந்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.