சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பொன்ராஜ். இவர் கடந்த 3ம் தேதி இரவு, நந்தம்பாக்கம் பட்ரோட்டில் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை விசாரணைக்காக நிறுத்த முயன்றபோது, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று, பொன்ராஜ் மீது மோதி நிற்காமல் சென்றது. விபத்தில் படுகாயமடைந்த பொன்ராஜை அருகிலிருந்த போலீசார், மீட்டு சிகிசைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக மவுண்ட் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதற்கட்டமாக அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மீது ஆட்டோ மோதிவிட்டுச் சென்ற பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.