இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் 11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இன்று தொடங்குகிறது. 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும், மலேசியா, வங்காளதேசம், தென்கொரியா, ஓமன் ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த 2-வது சுற்றுக்கு தகுதி பெறும். 2-வது சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணியின் கேப்டனாக பிரேந்திர லக்ரா உள்ளார். இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த மாரீஸ்வரன், சக்திவேல், எஸ்.கார்த்தி உள்பட அதிகமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியிலும் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். போட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் அப்டேட்களுக்கு பிளே ஸ்டோரில் “பெங்கலின் குரல்” ஆப் பதிவிறக்கம் செய்யவும்