ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், உச்சிப்புளி அடுத்த தில்லை நாச்சியம்மன் குடியிருப்பில் உள்ள தில்லை நாச்சியம்மன் கோவிலில் 4ஆம் ஆண்டு பூச்செரிதல் விழா நடைபெற்றது. இந்தவிழாவில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மனுக்கு பூந்தட்டு ஏந்தி ஊர்வலம் சென்று தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதனையடுத்து தில்லை நாச்சியம்மனுக்கு பூவினால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்றது.