அமெரிக்கா வெளியிடும் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையில், நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 3வது இடத்தில் தமிழகத்தில் பிறந்தவரான ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் உள்ளார். அதானி குழும நிறுவனர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அதுபோல் முதல் இடத்தில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 90.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். டாப் 10 உலக கோடீஸ்வரர்களில் பத்தாவது இடத்தில் அம்பானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.