பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தயதை அடுத்து, புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் செரீப் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஷபாஷ் செரீப், ‘இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்துவைப்பது இன்றியமையாதது என அவர் தெரிவித்துள்ளார்.