புதுடெல்லி சென்றிருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக புதுடெல்லி சென்றிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.