கர்நாடகாவில் பி.ஜே.பி. தொண்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டது அம்மாநில அரசியலில் புயல்வீசத் தொடங்கியது. இதைக் கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இப்பிரச்சினை அம்மாநில அரசுக்கும் அமைச்சர் ஈசுவரப்பாவுக்கும் மேலும் நெருக்கடியைத் தந்தது. இதையடுத்து, ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததுடன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையைச் சந்தித்து, தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார். அந்தக் கடிதத்தை உடனடியாக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அனுப்பிவைத்தார் முதல்வர் பசவராஜ். இந்த நிலையில், ஈசுவரப்பாவின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் தாவர்சந்த் கெலாட் அங்கீகரித்துள்ளார்.