ஆந்திராவில் கடந்த 2019ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி அமைத்தனர். இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதில், ஏற்கனவே அமைச்சர்களாக இருந்து அனுபவம்வாய்ந்த 11 பேரோடு புதிதாக 13 பேருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்தவிழாவில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.