டில்லியில், 37வது நாடாளுமன்ற அலுவல் மொழி குழு கூட்டத்தில் தலைமை வகித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது, அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இது, நிச்சயமாக இந்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல், இந்தியில் தயாரிக்கப்படுகிறது என்ற அமித்ஷா இந்தநிலையில், அலுவல் மொழியான இந்தியை, ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றும் நேரம் வந்து விட்டது என்றார். மேலும், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழியை பேச வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள், ஒருவருக்கொருவர் இந்திய மொழிகளில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியை ஆதரித்து அமித்ஷா பேசியுள்ளது, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.