காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் பல தனியார் தொழிற்சாலைகள் உள்ளது. இந்தநிலையில், அங்கு இருக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் 35 பேரை ராணிபேட்டையிலிருந்து ஏற்றிகொண்டு சென்ற வாகனம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டு இருந்தது. அப்போது, தாமல் அருகே முன்னால் முந்தி சென்ற கனரக வாகனத்தின் மீது மோதி ஊழியர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த தானியர் தொழிற்சாலையை சேர்ந்த 19 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அந்தவழியே சென்ற பொதுமக்கள் காயமடைந்தவர்களை, மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 18 பேர் சிறு காயங்களுடன் தப்பினர். பலத்த காயமடைந்த ஒருவர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், விபத்துக்குள்ளான ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவனையில் அவர்களின் உறவினர்கள் குவிந்ததால் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. சம்பவம் குறித்து பாலுசெட்டி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.