தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, இன்று காலை தொடங்கியது. இதில், சொத்துவரி உயர்த்தியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். எனினும், முதல்வர் அளித்த விளக்கத்தை ஏற்கமறுத்த அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், சொத்துவரியை திரும்பப் பெறக் கோரி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.