அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது அஇஅதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. சமூக நீதியின்பால் அதிமுகவிற்குள்ள அக்கறைக்கு மற்றுமொரு சான்று’ எனப் பதிவிட்டுள்ளார்.