பிரான்ஸில் 2017 முதல் அதிபராக இருந்துவருபவர், இமானுவல் மேக்ரான். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் மேக்ரான் உள்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில் பிரான்சில் முதல் சுற்று அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் மேக்ரானுக்கும், பெண் வேட்பாளர் மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.