15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 65ஆவது லீக் ஆட்டத்தில், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. நேற்று மாலை 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்து போட்டியைத்தொடர்ந்தது. இதனையடுத்து ஐதராபாத் அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய மும்பை அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்தநிலையில், இதுவரை இந்தத்தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3 போட்டிகளில் வெற்றியும் 10 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும், ஐதராபாத் அணி விளையாடிய 12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 8ஆவது இடத்திலும் நீடிக்கிறது. இந்தநிலையில், இந்தபோட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பில் ஐதராபாத் அணி நீடிக்கிறது.